தன் மனைவி மரணத்திற்கு காரணமானவனைப் பழிவாங்கப் புறப்படும் கணவனுக்கு நேர்ந்தது என்ன...? வில்லனைத் துரத்தும் கொலைகாரன் வில்லன் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கொலைகாரனைக் கொலை செய்ய முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புவது ஏன்...?
கொலைகாரனைக் கண்டுபிடிக்க திட்டமிடும் இன்ஸ்பெக்டர் சிசிடிவி கேமராவில் பதிவான முகத்தைப் பார்த்து அதிர்ந்து அவனைக் கைது செய்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே வில்லனைத் துரத்தும் கொலைகாரன் மறுபடியும் வர, யார் இந்த கொலைகாரன்...? என்று ஆச்சரியப்படும் இன்ஸ்பெக்டர் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடித்து வில்லனைக் காப்பாற்றினாரா...?
வில்லன் கொலை செய்யப்பட்டாரா... ? யார் கொலை செய்தது..? போன்ற திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த நாவல் தான் உன்னைக் கண் தேடுதே... வாசியுங்கள் நாவலை நேசிப்பீர்கள்.