நாவலின் துவக்கம் முதல் இறுதி வரை பரபரப்பும், திடுக்கிடலும், திருப்பங்களும் நிறைந்து வழிந்து ஓடுகிறது... எங்கோ நடக்கும் கொலை காட்சியை அப்படியே ஓவியமாக தீட்டுகிறான் வினோதன். அவனை விரும்புகிறாள் காந்தர்யா. அவனே அந்த கொலையை செய்து விட்டு அதை ஓவியமாக தீட்டுவதாக அவனை லாக்கப்பில் வைத்து பூட்டுகின்றனர். அடுத்து நடக்கும் கொலையை லாக்கப் அறையின் சுவற்றில் தீட்டுகிறான். அந்த காட்சிப்படியே இன்னொரு இடத்தில் கொலை நடந்திருக்கிறது.
வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம்? என்பது குறித்து டாக்டர், மனோவியல் துறை புரபசர் அவர்களிடம் விவாதிக்கப்படுகிறது. "மனதில் உண்டாகும் எண்ணங்களுக்கு உருவம், ரூபம், வர்ணம் முதலான குணங்கள் உண்டு. அவற்றை படம் பிடித்து விடலாம்" என்ற உண்மையை நம்ப இயலாததாய் இருக்க... அடுத்து நடக்கப் போகும் கொலையை தடுக்க அவனை ஓவியம் வரையுமாறு உதவி கேட்கிறார் இன்ஸ்பெக்டர். கருப்பு உடை அணிந்த அந்த மர்ம உருவம் யார்? என்பது முடிவில் தெரியும் போது ... திடுக்கிட்டுகின்றனர்.
"சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவந்து சேர எட்டு நிமிடங்கள் பிடிக்கும். ஆனால், மனம் ஒரு நொடிக்குள் சூரியனுக்கு சென்று விடும்" என்பதற்கு உண்மையையும் நம்ப இயலாததாய் கருத, வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம் என்பது குறித்து டாக்டர் புரபசரிடம் காவல்துறை மீண்டும் விவாதிக்கிறது. இறுதியில் கருப்பு உடை அணிந்து கொலை செய்கிற அந்த உருவம் யாரென தெரிகிற போது கதையில் மட்டுமல்ல, வாசகர்களின் மனதிலும் தான் அந்த அதிர்ச்சி கலந்த திருப்பம் உண்டாகும். இனி கண்கள் எப்படி ஓவியம் வரையும்? என்பதை "கண்வரைந்த ஓவியம்" படித்து அறிந்து கொள்ளுங்களேன்...