தமிழ் மொழியில் 20,000 பழமொழிகளுக்கு (Proverbs) மேல் உள்ளன. அவற்றில் நிறைய பழமொழிகளின் பின்னுள்ள அர்த்தம் என்ன என்று தெரிவதில்லை. மேலும் பல பழமொழிகளுக்கு இப்போதுள்ள மக்கள் ஊகித்து எழுதும் பொருளை நம்பவேண்டியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கதை, கட்டுரைகளில் காணப்படும் பழமொழிகள் அனைத்தும் இன்னும் தொகுக்கப்படவில்லை. இந்த நூலில் நான், சில பழமொழிகளுக்கு உரிய கதைகளை, கிடைத்த மட்டிலும், சேர்த்துள்ளேன்.
பரத நாட்டிய சாஸ்திரத்தை 'நாட்டிய ராணிகள்' மிகவும் புகழ்ந்தபோதும் அதை தமிழில் முழுதும் மொழிபெயர்த்ததாகத் தெரியவில்லை. அதன் முதல் அத்தியாயத்திலும் கடைசி அத்தியாயத்திலும் சுவையான கதைகள் இருக்கின்றன. அவைகளையும் வாசகர்களுக்குத் தந்துள்ளேன்.