மதுமதி மிக அழகிய பெண். அவளின் பெற்றோர் மோகன் என்பவருக்கு மதுமதியை திருமணம் செய்து தர ஏற்பாடு செய்கின்றனர்,தன் முன்னால் காதலனான ராஜசேகரால் திருமணத்தில் தடை ஏற்படுமோ என மதுமதி அஞ்சுகிறாள். அவள் ராஜசேகரனை விட்டு விலகியதன் காரணம் என்ன?
மறுபுறம், மகளை இழந்த டேவிட் தன் மகள் இறப்பிற்கு காரணமானவனை கொலை செய்யத் துடிக்கிறான். போலீஸ் ஒரு புறம் டேவிட்டை துரத்துகிறது.
ஒரு கட்டத்தில் மது மற்றும் டேவிட் இருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒரே நேர்க்கோட்டில் இணைகிறது. மோகனை மதுமதி திருமணம் செய்து கொண்டாளா?
ராஜசேகர் என்ன ஆனான்? இறுதியில் டேவிட்டின் நிலை என்ன ஆனது? வாசிப்போம்...