முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்றவை ஐந்து நிலங்களாக தமிழகத்தில் பன்னெடுங் காலமாக சிறந்து விளங்கிக் கொண்டு வருகின்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இந்த ஐந்து திணைகளையும் பாடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது விளங்குகிறது
சங்கம் மருவிய நூல்களில் அகப் பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லக் கூடிய நூல்கள் ஐந்து உள்ளன. அந்த ஐந்தில் ஐந்திணை ஐம்பதும் ஒன்றாகும்.
மற்றும் உள்ளவை ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைநிலை என்பவையாகும்.
இதில் ஒவ்வொரு திணையையும், திணைக்கு பத்து என்று ஐந்திணைகளுக்கும் ஐம்பது பாடல்கள் அமைத்து பாடப்பட்டிருப்பதால் இந்த நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது.
அன்பின் அமைதியாகிய ஐந்து திணைகளுக் குரிய ஒழுக்கத்தை சொற்சுவை, பொருட்சுவை கொண்டு இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது.
கற்றவருடைய மனதை விட்டு எப்போதும் நீங்காமல் மகிழ்ச்சியை தரக் கூடிய நூலாக இந்த ஐந்திணை ஐம்பது அமைந்துள்ளது.
''ஐந்திணை ஐம்பதும், ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்'' என்று கூறப்படுவதுண்டு. அதாவது இந்த ஐந்திணை ஐம்பதைப் படிக்காதவர்கள் செந்தமிழ் இனத்தில் சேர்த்துக் கொள்ள தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்டு வருகிறது.
இதிலிருந்து இந்த நூலின் சிறப்பு தெரிய வருகிறது. இந்த நூலை எழுதிய ஆசிரியர் மாறன்பொறையனார் என்பவர்.
சங்க காலத்தில் தமிழர்களின் அக வாழ்க்கையை ஐந்திணைகளிலும் படம் பிடித்துக் காட்டும் மிகச் சிறந்த இலக்கியமாக ஐந்திணை ஐம்பது விளங்குகிறது.
இந்த நூலை படிக்காதவர்கள் தமிழர்களே இல்லை என்பது போல பழமொழி கூட விளங்குகிறது. அத்தகைய சிறப்புக்குரிய நூலை தமிழர்கள் அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும்.