இளம் வயதில் ரத்த முறுக்கத்தில் காரை வேகமாய் ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தி ஒரு பெரியவரின் உயிரைப் பறிக்கிறான் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசான சூர்யா. அவனை சட்டத்திடமிருந்து காப்பாற்றும் விதமாய் தன் வீட்டு டிரைவரை விபத்திற்குப் பொறுப்பேற்கச் செய்கிறார் சூரியாவின் பணக்காரத் தந்தை. அதற்குப் பிரதியுபகாரமாய் அவர் குடும்பத்திற்கு பெரும் தொகை வழங்குவதோடு, அவர் மகள் திருமணத்தை தானே நடத்துவதாகவும் வாக்குக் கொடுக்கிறார். சூர்யாவை அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய சூர்யா தன் தந்தை அந்த டிரைவர் குடும்பத்தை ஏமாற்றி விட்டதைக் கண்டு பிடிக்கிறான். அவரது பாவத்தைக் கழுவும் விதமாய் அந்த டிரைவரது மகளைத் தேடிக் கண்டு பிடித்து, துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். அவர்களை ஏமாற்றிய அந்தப் பணக்கார வீட்டைச் சேர்ந்த பையன் என்பது தெரிந்தால் அவள் தன்னை ஏற்றுக் கொள்ளமாட்டாள், என்பதால் தன்னை ஒரு ஏழை என்று சொல்லிக் காதலிக்கிறான்.
ஒரு நாள் குட்டு உடைகிறது...
விளைவு?
நாவலில்.....