என்னையறியாத ஒரு திருப்தி இதில் பரவியிருப்பதாக உணர்கிறேன். நான் ஆத்ம திருப்திக்காகக் கதை எழுதுபவன். கதை எழுதுவது என்பது என்னை இயங்கச் செய்து, ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது. தினசரி நான் யோகா பண்ணுவது போல.இத்தொகுதியில் 15 கதைகள் உள்ளன. அதில் 5 முதியோர் மனநிலைத் தவிப்புகளைச் சொல்லும் கதைகள். இன்றைய சமூகச் சூழலில் இது அவசியம் என்று கருதுகிறேன். இன்றைய எழுத்துலகிலும் கூட இவை ஒதுக்கப்படுகின்றன எனலாம். அறிவியல் தொழில் நுட்பம் விஞ்சியிருக்கும் இக்காலகட்டத்தில் நவீனம் என்ற பெயரில் குதூகலமாக மனதைச் சாக்கடையாக்கும் விஷயங்களை என்னால் சொல்ல முடியாது. சமூகச்சிந்தனை உள்ள படைப்புக்களைத்தான் தர முடியும். அது ஆரவாரத்திற்கல்ல. ஆழச் சிந்தித்து நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு. என் எழுத்தின் மூலம் என் மனதை நான் புடம் போட்டுக் கொள்கிறேன். படிப்பவர்களுக்கும் இது கிட்டும் என்று நம்புகிறேன். கொஞ்சமேனும் ஒருவரைச் சலனப் படுத்தாத எழுத்தினால் என்ன பயன்? நான் சொல்வது நல்ல வகையில். வண்டியிழுக்கும் கூலித் தொழிலாளி, பழைய பேப்பர்க்காரர், அலுவலக உதவியாளர், லேத்துப் பட்டறை வேலையாள் என்று அடித்தட்டு மக்கள்தான் இத்தொகுதியின், என் கதைகளின் ஆதாரங்கள். இவர்களோடு நடுத்தர வர்க்க வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவங்களோடு சேர்த்து ஆழ்ந்த ரசனையோடு முன் வைப்பது எனக்குப் பிடித்தமானதாகவும், என்னைத் துடிப்போடு இயங்கச் செய்வதாகவும் இருக்கிறது.விழுமியங்களான மதிப்புமிக்க விஷயங்களுக்கு இடமில்லாமலே போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. எங்கு சுற்றினாலும், எதில் நுழைந்தாலும், அந்தப் புள்ளியிலிருந்துதான் கிளை பிரிந்தாக வேண்டும். அடிப்படை ஆதார ஸ்ருதி அதுதான்.அன்புடன்,உஷாதீபன்
- Newly Added eBooks - Available Now
- The Hit List (Books We Love)
- Top 500 eBook Fiction
- Top 500 eBook Nonfiction
- Popular Romance
- Books you may have missed
- Health & Fitness
- Business Biographies
- Fantasy
- Historical Fiction
- Thrillers
- Crime
- Self-Enrichment
- See all
- Newly Added Audiobooks - Available Now
- Top 500 Audiobook Fiction
- Top 500 Audiobook Nonfiction
- Business Biographies
- Business & Management
- Self-Enrichment
- Audiobooks for your commute
- Thrillers
- Foreign Language Study
- Humour
- See all
- Newly Added
- Children’s Favorite Characters
- Most Popular Children's Titles
- Comic & Graphic Books
- Children's Read-Alongs
- Popular Teen Reads
- Armchair Explorers for Children and Teens
- Science Fiction & Fantasy - Available Now
- Roald Dahl Collection
- See all
- Chinese Titles - Adult
- Chinese Titles - Young Adults
- Chinese Titles - Children's
- 中文书籍
- Malay Titles - Adults
- Malay Titles - Young Adults
- Malay Titles - Children's
- Tamil Titles
- Tamil Titles - Children's
- See all