சில ஆண்டுகளுக்கு முன்னால் 'கண்ணன் நடந்த புண்ணிய பூமி' என்ற மகுடத்தோடு வடக்கிலும் தெற்கிலுமாய் பாரத நாட்டில் நான் தரிசித்து வந்த திருக் கோயில்களைப் பற்றிய என்னுடைய கட்டுரைகளை நூலாக வெளியிட்டது. இப்போது 'தலங்களின் தரிசனம்' என்ற நூல் உங்கள் கரங்களில்.
பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம் தான்; வாழ்க்கைப் பயணம் உட்பட! கலைச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் உள்ள இடங்களுக்குச் சென்று வருவதும், அப்போது ஏற்படுகிற உணர்வுகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கின்றன.
இந்தக் கட்டுரைகள், படிக்கிற வாசகர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதோடு, அந்த இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டக் கூடும். பத்திரிகைகளில் படிக்கும் அன்பர்கள் அவ்வாறே எழுதுகிறார்கள்; என்னிடம் நேரிலும் கூறுகிறார்கள்.
மிக்க அன்புடன்
சுப்ர. பாலன்