ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் முன்னதாக அது கூத்தாட்டம் போடத் தொடங்கும். ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து, எப்படியோ எழுதி விடுவேன்.
பிறகுதான் என் பேனா ஆட்டத்தை நிறுத்தும். அதனால் தான் 'சும்மா இருக்காத பேனா' என்று இந்தத் தொகுப்புக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன். எழுதியவற்றில் நல்லதென்று எனக்குத் தோன்றும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தனிப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். இதுவரை ஐந்து தொகுப்பு வந்திருக்கின்றன. இது ஆறாவது தொகுப்பு.
- ரா.கி. ரங்கராஜன்