Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Uyarntha Sinthanaiye Vallamai! by M.P.Natarajan - Available

Uyarntha Sinthanaiye Vallamai!

ebook

அன்புடையீர் வணக்கம்!

'உயர்ந்த சிந்தனைகளே வல்லமை' என்ற மனிதநேய மாண்புகளை எடுத்துரைக்கும் மகத்தான அறிவுப் பொக்கிஷங்களை சர்வ சக்தியோடு வல்லமை படுத்தும் விதமாக உயர்ந்த சிந்தனைகள், உயர்ந்த எண்ணங்கள் என்றுமே சிறப்பானதொரு வாழ்வைத் தரும் என்ற சீரிய நோக்கோடும், சீரிய முயற்சியோடும் எழுதப்பட்டதே இந்நூலாகும்.

மனிதன் வாழ்வை தொடங்கிய காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை மகத்தான சீரிய பணிகளைச் செய்து வெற்றி வாய்ப்புகளைக் குவிப்பதற்கு படுகின்ற சோதனைகளும் தடைகளும் அளப்பரியது. ஆகவே இந்த வெற்றி வாய்ப்புகளை எளிதில் சாதனைகளாக சரித்திரம் படைக்க சில வழிமுறைகளும் கருத்துக்களும் தகவல்களாகப் படித்து உணரும்போது மனதிலே தெளிவும் தன்னம்பிக்கையும் உருவாகும் என்ற விதத்தில் இந்த சிறுசிறு தலைப்புகள் மூலம் எளிதில் புரியும்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய நல்லாசிரியர், முத்தமிழ் முரசு சி.முத்துகுரு எம்.ஏ.,பி.எட்., அவர்களுக்கும், பதிப்புரை வழங்கி புத்தகத்தை சீரிய முறையில் வெளியிட்ட திரு. நேரு அவர்களுக்கும், மற்றும் அவ்வப்போது ஊக்கமும் பாராட்டும் தந்து என்னை உருவாக்கிய பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் ஆகிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கை யாக்குவதில் பெருமையோடு அகமகிழ்கிறேன்.

என்றும் உங்கள் ஆதரவு கரத்தோடு,

- இரா.சி.ப. நடராசன்.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil