பிரபல எழுத்தாளர் திரு. சாவி அவர்கள் நடத்தி வந்த 'சாவி' பத்திரிகையில் 'பிரஹஸ்பதி' என்ற புனைப் பெயரில் சில குட்டிக் கட்டுரைகள் எழுதினேன். திரு. சாவி அவர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரைகள் அவை. (அவரே என்னிடம் சொன்னார் ஹி ஹி!) அவற்றில் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன். ஓவிய சக்ரவர்த்தி திரு. கோபுலு அவர்களின் தூரிகை பிரஹஸ்பதிக்கு உயிரூட்டியுள்ளது என் பாக்கியம்.
- பாக்கியம் ராமசாமி