வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்ட உடன் நம் மனதில் வீரம் விளையும். ஆங்கிலேய ஆட்சியாளர்களை அச்சமின்றி நேரடியாக எதிர்த்தவர். இறுதிவரை அவர்களை எதிர்த்துப் போராடி வீரமரணத்தைத் தழுவியவர். இதனால் நம் மனதில் நிரந்தரமாய் சரித்திரமாய் பதிந்து போனவர்.
நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்து தங்கள் விலைமதிக்க இயலாத உயிரை நாட்டு நலனுக்காக இழந்த தலைவர்களை நாம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும். இன்றைய மாணவ மாணவியர்கள் இத்தகைய தூய்மையான உள்ளங்களின் வீரவரலாற்றைப் படித்து மனதில் நிறுத்தி நாட்டிற்காக உழைக்க தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையையும் இதன் மூலம் உயர்த்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டுப்பற்று மிகவும் அவசியம். வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வரலாற்று நூல்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற விசேஷங்களில் வாங்கிப் பரிசளிக்கப் பழக வேண்டும். நாட்டிற்காக பாடுபட்ட நல்ல உள்ளங்களை வருங்காலக் குடிமக்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்போதுதான் இந்தியா உலக அரங்கில் மிகச் சிறப்பான இடத்தை அடைய முடியும்.