நண்பனின் காதலை உடனிருந்து ரசிதத்தின் வெளிப்பாடு இந்த "Frienda போல யாரு மச்சான்". சென்னையின் கொளுத்தும் வெயிலில் வேலையின் தனிமை போக எனக்கு துணையாக இருந்தது என் நண்பனின் காதல். சின்ன சின்ன சண்டைகள், சண்டையில் புரிதல் தந்தது அவன் காதல். இந்த கிருக்கல்களை புத்தகமாக்குவது குறித்தும் உணர்த்தியது நண்பனின் பேச்சு. என் சின்ன சின்ன பார்வையையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் சுற்றுப்புறம். இந்த எழுத்துகளுக்கு ஆணிவேர் பின் வரும் ஒன்றரை வரியே.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
–குறள்