வணக்கம் அன்பர்களே...
விளையாட்டுப் போல் இது என் மூன்றாவது கதைத் தொகுப்பு. சந்தோஷமாக இருக்கிறது. இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னார்... "உன் எழுத்தையெல்லாம் நான் கணக்குலயே எடுத்துக்க மாட்டேன்... அது இலக்கியத் தரம் வாய்ந்ததில்லை"
ஐயா எனக்கேத் தெரியும்... நான் இலக்கியம் படைக்கவில்லை என்று... நான் சந்தோஷத்துக்காக எழுதுகிறேன்... என் பாணியில் எழுதுகிறேன்... அதை ரசிப்பதற்கு சில ஆன்மாக்கள் இருக்கிறார்கள்... என்னுடைய நேரிடையான ஆடம்பரமில்லாத எழுத்து அவர்களுக்குப் பிடித்திருக்கிறது... அது போதும் எனக்கு...
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகளெல்லாம் கல்கி மின்னிதழிலும், லேடீஸ் ஸ்பெஷன் தீபாவளி மலரிலும், குங்குமம் வார இதழிலும், குவிகம் மின்னிதழிலும், பூபாளம் சிற்றிதழிலும் பிரசுரமானவை.