Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Laabam by Ramesh Prabbha - Available

Laabam

ebook

எப்போதுமே வேலையில்லா திண்டாட்டத்தைப்பற்றி பேசும்போது, எல்லோருமே வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்காமல் சொந்த தொழில் தொடங்கினால் இன்னும் பத்து பேருக்கு வேலை தரலாமே என்று அட்வைஸ் அள்ளி வழங்குவார்கள். ஆனால், வேலை தேடுபவர்களை போய் கேட்டால், "எங்களுக்கு வெளியூருக்கு இண்டர்வியூ போறதுக்கே காசு இல்லாம சிங்கி அடிக்கிறோம். இதுல நாங்க எங்க பிசினஸ் ஆரம்பிக்கிறது" என்று அவர்கள் புலம்புவார்கள். இந்த இரண்டு தரப்பிலுமே யதார்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, சொந்தமாக தொழில் தொடங்குவதுபற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் முன்பைவிட சமீபகாலங்களில் சற்று அதிகமாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.இப்படி பலதரப்பட்ட பின்னணியினர் தொழில் முனைவோராக முயற்சி செய்யும்போது அனைவருக்கும் பொதுவான விஷயங்கள் பல இருக்கும். அவரவர் பின்னணிக்கு ஏற்ப கவனிக்க வேண்டிய விஷயங்களும் தனித்தனியாக நிறையவே இருக்கும். இவை அனைத்தையும்பற்றி விரிவாக பார்ப்பதுதான் இந்த நூலின் நோக்கம். இந்த நூலில், தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துகிற தகவல்களும், உலகளாவிய பல பிசினஸ் உதாரணங்களும் இடம்பெறும். படித்துப் பயன்பெறுங்கள்.விரைவிலேயே நீங்கள் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக உருவாக வாழ்த்துகள்!

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil