என் அன்பான கண்மணியின் வாசக இதயங்களுக்கு வணக்கம்!
'இப்படி கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?' என நினைக்க வைக்கிற கதை இது. இங்கே பூக்களை விட முட்களே அதிகம். பனிப்பொழியும் சிகரங்கள் உள்ள இதே பூமியில்தான், வெடித்து சிதறும் எரிமலைகளும் காணப்படுகின்றன. மனிதர்களிலும் கூட அப்படித்தான். நல்ல மனம் படைத்தவர்களைவிட, பிறர் மீது வீண்பழி சுமத்தி... கேவலமாகப் பேசி... அவதூறான வார்த்தைகளைப் பரப்பிவிட்டு சந்தோஷப்படுகிறவர்களே ஏராளம்.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகள் எல்லாம் கத்திகளாக மாறினால் யாராலுயும் தாங்கவே முடியாது. கொடிய முள்காட்டில் சிக்கிக் கொண்ட அழகும், மென்மையும் மறைந்த பட்டாம் பூச்சியைப் போல, இதயமே இல்லாதவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட இளம்பெண் இதயாதான் இந்நாவலின் நாயகி.
தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் இருந்து இதயா மீண்டாளா? தனது சிறகுகள் முறியாமல் தப்பினாளா? இல்லையா? என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை உடனே எழுதுங்கள்.
நன்றி மீண்டும் சந்திப்போம்
மகேஷ்வரன்