மனிதன் நேசிக்கிற உலகம் பல மாற்றங்கள் கண்டு முன்னேறி கொண்டிருக்கின்றன. மனிதன் என்பவர் மகத்தானவன் பெருமைக்குரியவன், விசித்திரம் கொண்டவன் எதையும் துணிச்சலாக செய்து முடிக்க கூடிய வல்லமைகளை பெற்று திகழ்பவன் என்பதை கண்டு உணரும் வகையில் உன்னதமான ஆக்க சக்திகளையும் அறிவுச் சக்திகளையும் பெற்று திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு ஒரு உன்னதமான மகத்தான சக்தியை பெற்று திகழ்வதற்கு மக்களின் பேரார்வம் நீங்கள் கொடுத்து உதவுகிற தன்னம்பிக்கையும் தான் உரிய லட்சியத்தை அடைய முடியும் என்பதனை இலக்கீடாக வைத்து திறம்பட எழுதப்பட்டுள்ள நூலை படித்து பயன் பெறுக.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திருமதி. சாருமா அவர்களுக்கும், இந்நூலுக்கு ஊக்கம் தந்த அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப்பணியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும் மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குவதில் பெருமையோடு அகமகிழ்கிறேன்.
அன்புடன்,
மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A., MHRM.