"இந்த பயம், 'யெஸ் ஆர் நோ' டைலமா நிறைய பெண்களுக்கு ஏற்படத்தான் செய்யும் ஸ்வாகினி. எதுனால உனக்குத் திருமண வாழ்க்கையின் மீது இன்டரெஸ்ட் இல்லை? ஆர் யூ நாட் ப்ரிப்பேர்ட் ஃபாலிங் இன் லவ் வித் சம்ஒன்?"
"ஆர் யூ நாட் இன்டரெஸ்டட் இன் செக்ஸ்? ஆர் யூ நாட் அட்ராக்டட் டுவர்ட்ஸ் ஃபேமிலி லைஃப்?"
"நான் சொன்னது எல்லாமே, இந்த வயதுக்கு உண்டான நேச்சுரல் ஃபீலிங்க்ஸ் தானே!"
"உனக்கு எந்த வகையில கோளாறு? ஏன் வேண்டாம்'னு சொல்றே? உனக்கு ஏதாவது ஃபோபியா இருக்கா? நோ ப்ராப்ளம்! கன்சல்டேஷன் எடுத்துக்கலாம்." அவன் தன் இஷ்டத்துக்கு சொல்லிக்கொண்டே செல்ல, அதிர்ந்து பார்த்தாள். "ஐயையோ! நீங்களா என்னவோ கற்பனை பண்ணிட்டுப் பேசாதீங்க சார். எனக்கு எந்த ஃபோபியாவும் இல்லை. எனக்கு இதுவரை யார்மீதும் காதல் வரவில்லை. கல்யாண ஆசையும் பொங்கவில்லை. எல்லாம் தானாகப் பொங்கி வரும்போது பார்க்கலாம்." என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.